போதைப்பொருள் பயன்படுத்திய ஐந்து பஸ் ஓட்டுனர்கள் சோதனையில் சிக்கினர்!

அலோர் ஸ்டார், ஏப் 8- தடை செய்யப்பட்ட போதை வஸ்துகளைப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேருந்து ஓட்டுநர்கள் சாலை போக்குவரத்து இலாகா ஓப் ஹாரி ராயா 2024 சாலை பாதுகாப்பு இயக்கத்தின் போது அந்த ஐவரும் அடையாளம் காணப்பட்டனர்.

பயணத்தை தொடங்குவதற்கு முன்னர் தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனம் மேற்கொண்ட சோதனையில் 30 முதல் 60 வயது வரையிலான அந்த ஐவரும் மெத்தபெத்தமின் போதைப் பொருளை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதை ஜே.பி.ஜே. அமலாக்கத் துறையின் மூத்த தலைமை இயக்குநர் டத்தோ லோக்மான் ஜமான் கூறினார்.

பஸ் ஓட்டுனர்கள் பயணத்தின் போது கைப்பேசியைப் பயன்படுத்துவது உள்ளிட்ட சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவதைக் கண்டால் அது குறித்து உடனடியாக அதிகாரிகளிடம் புகார் செய்யுமாறு பயணிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles