
கோலாலம்பூர் ஏப்ரல் 9-
சர்ச்சைக்குரிய வினோத் ஸம்ரிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பேசிய வார்த்தைகள் தொடர்பில் மன்னிப்பு கேட்க முடியாது.
நாடாளுமன்றத்தில் நான் கூறிய கருத்துக்களில் உறுதியாக இருக்கிறேன்.
ஆகவே ஸம்ரி வினோத்திடம் ஒரு போதும் மன்னிப்பு கேட்க மாட்டேன்.
அவரை நீதிமன்றத்தில் சந்திக்க தயார் என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ராயர் தெரிவித்தார்.
இந்துக்களை அவமதித்ததாகக் கூறிய ராயர் மன்னிப்பு கேட்க வேண்டும். அறிக்கையை திரும்பப் பெறவும் அவருக்கு 14 நாட்கள் அவகாசம் அளிக்கிறேன் என்று ஸம்ரி வினோத் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பிரி மலேசிய டூடே

