
நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காக ரத்த பூஜை மேற்கொண்டபோது இளைஞர் ஒருவர் விரலை வெட்டிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் கார்வார் அருகிலுள்ள சோனார்வாடேவைச் சேர்ந்தவர் அருண் வெர்னேகர் (29). நகைக் கடை நடத்திவரும் இவர், பாஜகவின் தீவிர ஆதரவாளர் ஆவார்.
நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காக காளிக்கு சிறப்பு ரத்த பூஜை மேற்கொண்டார். அப்போது கை விரலை வெட்டி ரத்தம் சேகரிக்க முயன்றார். ஆனால் தவறுதலாக விரலின் முன் பகுதியை முழுவதுமாக வெட்டிக்கொண்டதால், விரல் துண்டானது.

