“பாஜக வேட்பாளரான என் மகன் தோற்க வேண்டும்” – ஏ.கே.அந்தோணி

கேரள மாநிலம் பத்தனம்திட்டா தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் காணும் தனது மகன் அனில் அந்தோணி தோல்வியுற வேண்டும் என விரும்புவதாக அவரது தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே.அந்தோணி தெரிவித்தார்.

“காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களின் வாரிசுகள் பாஜகவில் இணைவது மிகவும் தவறு. என் மகன் அனில் கே.அந்தோணி பாஜகவில் இணைந்து பத்தனம்திட்டாவில் போட்டியிடுகிறார்.

அவர் தோற்றுப்போய் அவரை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆன்டோ ஆண்டனி வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சிதான் எனது மதம்” என்று கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles