மலேசிய தெலுங்கு சங்கத்திற்கு அமைச்சர் கோபிந்த் சிங் டியோ20,000 வெள்ளி மானியம்!

செ.வே. முத்தமிழ் மன்னன்

பத்துமலை, ஏப்ரல் 10-
மலேசிய தெலுங்கு சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ 20,000 வெள்ளி மானியம் வழங்க முன் வந்துள்ளார்.

நேற்று உகாதி புத்தாண்டை முன்னிட்டு மலேசிய தெலுங்கு சங்கத்தின் ஏற்பாட்டில் பத்துமலை திருத்தலத்தில் உள்ள வெங்கடாசலபதி ஆலயத்தில் சிறப்பு பூசை மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

மலேசிய தெலுங்கு சங்கத்தின் தலைவர் டாக்டர் வெங்கட் பிரதாப் மற்றும் துணை தலைவர் சத்திய சுதாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோவின் சார்பில் அவரின் சிறப்பு அதிகாரி மாண்புமிகு சுரேஷ் சிங் கலந்து சிறப்பித்தார்.

அவர் தமது உரையில் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ 20,000 வெள்ளி மானியம் வழங்க இணக்கம் தெரிவித்துள்ளார் என்று சுரேஸ் சிங் குறிப்பிட்டார்.

500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இந்த உகாதி புத்தாண்டு விழா தெலுங்கு சமூகத்தின் கலை கலைச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் சீரும் சிறப்புடன் நடைபெற்று முடிந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles