

கோலாலம்பூர், ஏப் 12- தலைநகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த மாதம் 6 கைத்துப்பாக்கிகள் மற்றும் 200 தோட்டாக்களுடன் பிடிபட்ட இஸ்ரேலியர் மீது இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
Shalom avitan என்ற இஸ்ரேல் ஆடவர்
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.
துப்பாக்கி தோட்டாக்களை கடத்தியதற்காக துப்பாக்கி சட்டத்தின் 7ஆவது பிரிவின் கீழும், துப்பாக்கிகளை வைத்திருந்ததாக துப்பாக்கிகள் சட்டம் 1971 இன் பிரிவு 7 (1), 8 இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது
முப்பத்தாறு வயதான அந்த இஸ்ரேலிய ஆடவர் கடந்த மார்ச் 27ஆம் தேதி தலைநகர் ஜாலான் அம்பாங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் கைது செய்யப்பட்டார்.
அவர் மார்ச் 12 ஆம் தேதி ஐக்கிய அரபு சிற்றரசிலிருந்து இருந்து பிரான்ஸ் கடப்பிதழைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது.
இவருக்கு ஜாமீன் அனுமதிக்கப்படவில்லை.
பெர்னாமா

