
ஈப்போ, ஏப் 12- சாலை விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனமோட்டி ஒருவரை தாக்கியதாக கூறப்படும் நான்கு பாகிஸ்தானிய பிரஜைகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
தெலுக் இந்தான்-பீடோர் சாலையின் 16வது கிலோ மீட்டரில் நிகழ்ந்த அந்த சாலை விபத்தில் மூன்று பாகிஸ்தானியர்கள் உயிரிழந்ததன் எதிரொலியாக அந்த வாகனமோட்டி தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வாகனமோட்டி மற்றும் நான்கு ஆடவர்கள் சம்பந்தப்பட்ட கைகலப்பு தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி மூலம் அந்த நான்கு சந்தேகப் பேர்வழிகளும் அடையாளம் காணப்பட்டு நேற்று மாலை 4.20 அளவில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக ஹிலிர் பேராக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அகமது அட்னான் பாஸ்ரி கூறினார்.
நேற்று காலை 8.10 மணியளவில் அந்த விபத்து நிகழந்தத்தை தொடர்ந்து அதன் ஓட்டுநருக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
Bernama

