சொந்த அரங்கிலேயே லிவர்பூல் படுதோல்வி!

லண்டன் ஏப்ரல் 12-
ஜரோப்பா லீக் கிண்ணக் கால்பந்து போட்டி முதல் கால் இறுதி ஆட்டத்தில் லிவர்பூல் கிளப் சொந்த அரங்கிலேயே இத்தாலி Atalanta கிளப்பிடம் அதிர்ச்சி தரும் வகையில் படுதோல்வி அடைந்தது.

முதல் பாதி ஆட்டத்தில் 38 ஆவது நிமிடத்தில் Atalanta கிளப்பின் முதல் கோலை கியான்லுக்கா அடித்தார்.

பிற்பகுதியில் 60 ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலையும் இவரே அடித்தார்.

பின்னர் 83 ஆவது நிமிடத்தில் Atalanta கிளப்பின் 3 ஆவது கோலை மரியோ போட்டார்.

இந்த ஆட்டத்தில் கண்ட தோல்வியால் லிவர்பூல் கிளப்பின் அரையிறுதி சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளது.

இரு வாரங்களுக்கு முன்னர் இங்கிலாந்து எஃப் ஏ கிண்ணப் போட்டியில் கால் இறுதி ஆட்டத்தில் லிவர்பூல் தனது பரம எதிரி மென்செஸ்டரிடம் தோல்வி கண்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles