கெந்திங் ஹைலண்ட்சில் கலவரத்தில் ஈடுபட்ட 8 பேருக்கு வலைவீச்சு!

குவாந்தான், ஏப் 12- கெந்திங் ஹைலண்ட்ஸ் கெந்திங் கிளப்பில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட கலவரம் தொடர்பான விசாரணைக்கு உதவ எட்டு ஆடவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அந்த கிளப்பில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் (சி.சி.டி.வி.) மூலம் அந்த எண்மரும் அடையாளம் காணப்பட்டதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ யாஹ்யா ஓஸ்மான் தெரிவித்தார்

இந்த கைகலப்பு தொடர்பில் ஏற்கனவே நால்வர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு விட்டனர்

அவர்கள் அனைவரும் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டுள்ள நிலையில் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி அடுத்த விசாரணை நடைபெறும் வரை தலா 2,200 வெள்ளி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

Bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles