
சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடப் போகும் ம இகா வேட்பாளர் யார் என்பது பெரும் இழுப்பறியாக உள்ளது.
கடந்த தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் பிரகாஷ் ராஜ் போட்டியிட்டார்.
இருப்பினும் கெஅடிலான் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் ஆர் சிவராசா வெற்றி பெற்றார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் உஷா நந்தினி வேலை செய்து வருகிறார்.
தேர்தலில் போட்டியிட இவர் ஆயத்தமாகி வரும் வேளையில் சிலாங்கூர் மாநில
ம இகா இளைஞர் பிரிவு தலைவர் புனிதன் பெயரும் வேட்பாளராக அடிபடுகிறது.
இன்னும் ஓரிரு நாட்களில் சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட போகும்
ம இகா வேட்பாளர் உஷா நந்தினியா அல்லது புனிதனா என்பது தெரிந்துவிடும்.
கெஅடிலான் கட்சி சார்பில் வழக்கறிஞர் சிவராசா மீண்டும் போட்டியிடுகிறார்.

