
பேராக் மாநிலத்தில் தம்பூன் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கெஅடிலான் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை ஆதரித்து மலேசியா இந்தியர்கள் நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் மணிமாறன் மாணிக்கம் களம் இறங்கி உள்ளார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வருகையால் பேராக் மாநிலத்தில் பக்கத்தான் ஹரப்பான் அலை வீசத் தொடங்கி விட்டது.
தம்பூன் நாடாளுமன்றத் தொகுதியில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அமோக வெற்றி பெறுவார்.
மேலும் பேராக் மாநிலத்தையும் பக்கத்தான் ஹரப்பான் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று மணிமாறன் மாணிக்கம் தெரிவித்தார்.
புத்ரா ஜெயாவில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்கத்தான் ஹராப்பான் ஆட்சி அமைப்பது உறுதி என்று அவர் சொன்னார்.

