கொள்ளையர்கள் – துரோகிகளிடமிருந்து  நாட்டையும் மக்களையும் மீட்டெடுப்போம் சிலாங்கூர் மந்திரி புசார் சூளுரை!

கொள்ளையர்கள் மற்றும் துரோகிகளிடமிருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவோம் என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சூளுரைத்தார்.

இலட்சியங்களுடன் நம்பிக்கை பயணம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜொகூரில் மக்களின் ஆதரவுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து மலாக்காவில் இப்பயணம் தொடர்ந்தது.

மூன்றாவதாக கோல சிலாங்கூரில் கோலகலமாக இந்நிகழ்வு நடைபெற்றது..இந்த இலட்சியப் பயணம் இணைய தளங்களில்  இன்று வரையில் 5 லட்சம் பேருக்கு மேல் பார்த்துள்ளனர். இந்த எண்ணிக்கையை பார்த்து பலர் மிரண்டு போய் உள்ளனர்.

சிலாங்கூர் மாநிலம் நம்பிக்கை கூட்டணி ஆட்சியின் முன் உதாரணமாக திகழ்கிறது. 2008 ஆம் ஆண்டில் தேசிய முன்னணி இடமிருந்து எடுக்கையில் 400 மில்லியன் மட்டும் கையிருப்பாக இருந்தது.

ஆனால் இன்று 3 பில்லியன் ரிங்கிட்டுக்கு மேல் சிலாங்கூர் மாநிலம் கையிருப்போடு வெற்றி நடை போடுகிறது என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சூளுரைத்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles