
கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியில் ஜசெக சார்பில் போட்டியிடும் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ கணபதி ராவுக்கு முழு ஆதரவு தெரிவிப்போம் என்று முன்னாள் சார்ல்ஸ் சந்தியாகோ அறிவித்துள்ளார்.
எனக்கு பதில் கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளராக கணபதி ராவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு நானும் எனது ஆதரவாளர்கள் முழு ஆதரவை வழங்குவோம் என்று அவர் சொன்னார்.
இதனிடையே கடந்த மூன்று பொதுத் தேர்தலில் பூச்சோங் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜசெக துணை தலைவர் கோபிந்த் சிங் டியோ இம்முறை டமான்சாரா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார் என்று ஜசெக தலைமை செயலாளர் அந்தோணி லோக் அறிவித்தார்.
ஜொகூர் பக்ரி நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பீ யின் இம்முறை பூச்சோங் தொகுதியில் போட்டியிடுகிறார்.

