
கோம்பாக் நாடாளுமன்ற தொகுதியில் கெஅடிலான் கட்சி சார்பில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி போட்டியிடுகிறார் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோடி காட்டியுள்ளார்.
சிலாங்கூர் மாநில கெஅடிலான் தளபதியாக டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி விளங்குகிறார்.
இன்று அக்டோபர் 28 ஆம் கெஅடிலான் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்.
அந்த வகையில் கோம்பாக் நாடாளுமன்ற தொகுதியை மீண்டும் கெஅடிலான் கைப்பற்றும் வகையில் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி போட்டியிடுவார் என்றார் அவர்.

