சுங்கை சிப்புட்டில்
போட்டியிடுகிறேன்!
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அறிவிப்பு

இந்த தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதாக ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ் ஏ விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் இவர் போட்டிடுவாரா அல்லது இல்லையா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் இந்த தொகுதியில் போட்டியிடும் தமது விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

ம இகா வின் பாரம்பரிய தொகுதியாக சுங்கை சிப்புட் விளங்கியது.

2008 இல் நடைபெற்ற தேர்தலில் கெஅடிலான் சின்னத்தில் போட்டியிட்ட பிஎஸ்எம் கட்சி தலைவர் டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் துன் டாக்டர் சாமிவேலுவை தோற்கடித்தார்.

2013 இல் நடைபெற்ற தேர்தலில் இவரே வெற்றி பெற்றார். 2018 இல் கெஅடிலான் கட்சியை சேர்ந்த எஸ் கேசவன் வெற்றி பெற்றார்.

இம்முறை சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles