
கோலாலம்பூர், ஏப். 13-
அம்னோ இளைஞர் தலைவர் அணித் தலைவர் டாக்டர் முகமது அக்மல் சலே ஒரு இளம் தலைவராக முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
அதைவிடுத்து பேசுவது போன்ற முதிர்ச்சியற்ற நடத்தையை காட்டக்கூடாது என்று ஜசெக இளைஞர் அணித் தலைவர் கெல்வின் யீ பதிலடி கொடுத்துள்ளார்.
வீட்டுவசதி மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அமைச்சர் ங்கா கோர் மிங் போன்ற “முட்டாள்தனமான” அமைச்சர்களால் தான் பொருளாதாரம் மோசமாகச் செயல்படுகிறது என்று அக்மல் முகநூலில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இவரின் அறிக்கை இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு பதிலடி தரும் வகையில் பண்டார் கூச்சிங் எம்.பி. கெல்வின் பதிலடி தரும் வகையில் பதில் அளித்துள்ளார்.
அம்னோ இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அக்மால் கையில் இருக்கும் பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான விமர்சனங்களைச் சேர்க்க நியாயமான மற்றும் முதிர்ந்த வாதங்களை மேசையில் கொண்டு வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மலேசிய கினி

