
செ.வே. முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் ஏப்ரல் 13-
சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனில்காலம் என்னும் வசந்த காலம் தொடங்குகிறது.
இந்த வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும்.
அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இது திகழ்கிறது.
அந்த வகையில் சித்திரைத் திருநாள் நமக்கு வசந்தத்தை மட்டுமின்றி, வாழ்க்கை நெறிகளையும் போதிக்கும் பயனுள்ள திருவிழாவை மகிழ்ச்சியுடன் வரவேற்போம் என்று மலேசிய இந்தியர் டாக்சி கொமுனிகேசன் சங்கத்தின் தலைவர் முத்து மற்றும்
டாக்டர் குணசேகரன் தங்களது வாழத்து செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சிறப்பான தருணத்தில் எங்கள் குடும்பத்தின் சார்பாக அனைவருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

