
காளிதாஸ் சுப்ரமணிம்
மா. பவளச்செல்வன்
கோலாலம்பூர் ஏப்ரல் 13-
96 ஆண்டுகள் வரலாறு கொண்ட சிலாங்கூர் – கோலாலம்பூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் பதவியை தற்காத்துக் கொள்ள மீண்டும் போட்டியிடுவதாக நடிப்புத் தலைவர் நிவாஸ் ராகவன் தெரிவித்தார்.
கடந்த 2022 இல் நடைபெற்ற தேர்தலில் கடுமையான போட்டிக்கு இடையே நான் தலைவராக தேர்வு செய்யப்பட்டேன்.
இந்த இரண்டு வருட காலத்தில் சிலாங்கூர் – கோலாலம்பூர் இந்தியர் வர்த்தக சங்கத்தை சிறப்பான முறையில் சேவையாற்றி இருக்கிறேன்.
முன்னாள் மனிதவள அமைச்சர் வ சிவகுமார் மூலமாக இந்திய பாரம்பரிய தொழில் துறையினர் எதிர் நோக்கிய அந்நிய தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண போராடி வெற்றி பெற்றேன்.
இது தவிர்த்து வர்த்தக சங்கத்தின் உறுப்பினர்கள் நன்மை பயக்கும் வகையில் பல்வேறு தொழில் வர்த்தக திட்டங்களை உருவாக்கினோம்.
கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக சிலாங்கூர் – கோலாலம்பூர் இந்திய வர்த்தக சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன்.
முன்னாள் தலைவர் டத்தோ இராமநாதன் தலைவராக இருந்த போது நான் செயலாளராக இருந்து பணியாற்றி இருக்கிறேன்.
வர்த்தக சங்கத்தின் உறுப்பினர்களுக்கு தொடர்ந்து சேவையாற்ற விரும்புவதால் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட முன் வந்திருக்கிறேன் என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிவாஷ் ராகவன் தெரிவித்தார்.
வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி சிலாங்கூர் – கோலாலம்பூர் இந்திய வர்த்தக சங்கத்தின் பதவிகளுக்கும் வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது.
எனது அணியில் துணை தலைவர் பதவிக்கு குமரகுரு போட்டியிடுகிறார்.
சங்கத்தை தொடர்ந்து வெற்றிகரமாக வழிநடத்த ஆற்றல்மிக்க அணியுடன் நாங்கள் களம் இறங்குகிறோம் என்று அவர் சொன்னார்.

