
காளிதாஸ் சுப்ரமணிம்
சுங்கை பூலோ ஏப்ரல் 14-
அரசாங்கம் நிறைய உதவித் திட்டங்களை வழங்குகின்றன. ஆனால் அதை இந்தியர்கள் சரியான முறையில் பயன்படுத்தி கொள்வதில்லை என்று துணை அமைச்சர்
டத்தோ இரமணன் குறைப்பட்டு கொண்டார்.
வர்த்தக தொழில் துறையில் ஈடுபட்டுள்ள இந்தியர்களுக்கு அரசு பல உதவித் திட்டங்களை வழங்குகின்றன.
ஆகவே இனியும் காலம் தாழ்த்தாமல் அரசு வழங்கும் உதவித் திட்டங்களை இந்திய சமுதாயம் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்
இதனிடையே இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக மித்ரா தலைவர் பிரபாகரனுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு கழகத்தின் துணை அமைச்சருமான டத்தோ இரமணன் தெரிவித்தார்.
மித்ராவின் நடவடிக்கை குழுத் தலைவராக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் பொறுப்பேற்றுள்ளார்.
இவருடஇணைந்து பணியாற்ற நான் தயாராக உள்ளேன்..
குறிப்பாக அவர் ஏதும் ஆலோசனைகளை கேட்டால் அதை வழங்கவும் நான் தயார்.
சுங்கை பூலோவில் நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பின் டத்தோ ரமணன் ஊடகவியலாளருடன் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.

