நான் ஆணையிட்டால் பாடலை பாடியவர்இந்திய சமுதாயத்தை மறந்து விட்டார் என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை!டத்தோஸ்ரீ அன்வார் விளக்கம்

காளிதாஸ் சுப்ரமணிம்

ஷா ஆலம் ஏப்ரல் 14-
நான் ஆனையிட்டால் பாட்டை பாடியவர் இன்று இந்திய சமுதாயத்தை மறந்து விட்டார் என்று என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பிரதமராக பொறுப்பேற்ற பின் நாட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கே நேரமும் காலம் ஓடிக் கொண்டிருக்கிறது.

அனைத்து சமூகங்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டிய கடப்பாடு எனக்கு உள்ளது.

இதில் எந்த சமூகத்தையும் நான் ஓரங்கட்டவில்லை. கைவிடவும் இல்லை.

வசதிக் குறைந்த மக்களின் குறைகளை குறைக்கும் திட்டங்களில் இந்திய சமூகமும் பயன் அடைந்து வருகிறது.

மித்ராவின் வாயிலாக இந்திய சமுதாயம் பயனடையும் வகையில் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தெக்குன், அமானா இக்தியார் வாயிலாக இந்திய சமுதாயத்திற்கு என கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப்பள்ளி, தமிழ்க் கல்வியின் மேம்பாட்டிற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இப்படி இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக அரசு பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

இருந்தாலும் இந்திய சமுதாயத்தை நான் மறந்து விட்டேன்.
நான் ஆணையிட்டால் பாடலை பாடியவர் இன்று இந்திய சமுதாயத்தை மறந்து விட்டார் என்றெல்லாம் என் மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.

இந்த குற்றச்சாட்டை நான் முற்றிலும் நான் மறுக்கிறேன். இதில் எந்த உண்மையும் இல்லை என்று டாக்டர் அம்பேத்கர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது டத்தோஸ்ரீ அன்வார் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles