
காளிதாஸ் சுப்ரமணிம்
ஷா ஆலம் ஏப்ரல் 14-
ஷா ஆலம் ஐடிசிசி மாநாட்டு மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
டாக்டர் அம்பேத்கர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மேடைக்கு வந்தபோது டாக்டர் அம்பேத்கர் பேரன் பீமாராவ் அம்பேத்கர் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்த வேளையில் செந்தமிழ் செல்வர் ஓம்ஸ் தியாகராஜன் மாலை அணிவித்தார்.
பின்னர் அம்பேத்கர் பேரன் பீமாராவ் அவர்கள் டத்தோஸ்ரீ அன்வாருக்கு அம்பேத்கர் சிலையை நினைவு பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

