ஒடுக்கப்பட்ட மக்களின் உன்னத தலைவன் டாக்டர் அம்பேத்கர் மாநாட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்!

காளிதாஸ் சுப்ரமணிம்

ஷா ஆலம் ஏப்ரல் 14-
உலக அளவில் போற்றப்படும் மாபெரும் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் மாநாட்டை மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

இந்த மாநாடு ஷா ஆலம் ஐடியல் மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

டாக்டர் அம்பேத்கர் மாநாட்டை மலேசிய ஏற்று நடத்துவது இது மூன்றாவது முறையாகும்.

டாக்டர் அம்பேத்கரின் பேரன் பீமாராவ் அம்பேத்கர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டது மாநாட்டின் சிறப்பு அம்சமாகும்.

டாக்டர் அம்பேத்கர் மாநாட்டின் புரவலர் செந்தமிழ் செல்வர் ஓம்ஸ் தியாகராஜன், சட்டத்துறை துணை அமைச்சர் குலசேகரன், ஒற்றுமை துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணை அமைச்சர் டத்தோ இரமணன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், காடேக் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சாமிநாதன்,மலேசியாவுக்கான இந்திய தூதர் பி. என். ரெட்டி , மலேசிய அம்பேத்கர் இயக்கத்தின் தலைவர் டத்தோ பஞ்சமூர்த்தி உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles