
செ.வே. முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் ஏப்ரல் 14-
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு
கோர்ட்டு மலை பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜை இன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
கோர்ட்டு மலை பிள்ளையார் கோவில் தலைமை குருக்கள் சிவஸ்ரீ சிவகுமார் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு பூசையில் ஏராளமான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
சிறப்பு பூசைக்கு பின்னர் பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் வழங்கப்பட்டது.
இன்று காலையிலேயே அதிகமான பக்தர்கள் கோர்ட்டு மலை பிள்ளையாரை தரிசிக்க வருகை புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

