
காளிதாஸ் சுப்ரமணிம்
சுங்கை பூலோ, ஏப்ரல் 14-
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ இரமணன் ஏழு கோவில்களுக்கு மானியம் வழங்கி பேருதவி புரிந்துள்ளார்
கம்போங் பாரு சுங்கை பூலோ ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் தொழில் முணைவோர் மெந்ம்பாடு கூட்டுறவுத் துணை அமைச்சருமான டத்தோ ஆர். ரமணன் தலைமையில் சிறப்பு பூசைகள் விமரிசையாக நடைபெற்றது.
சிறப்பு பூசைகளுக்கு இடையே பரத நாட்டிய நிகழ்ச்சியும் இடம் பெற்றன.
இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான ஓவியப் போட்டி, பெரியவர்களுக்கான கோலப் போட்டி உட்பட பல நிகழ்வுகள் நடைபெற்றது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டத்தோ ரமணன் பரிசுகளை எடுத்து வழங்கினார்.
குறிப்பாக நூற்றுக்கும் மேற்பட்ட வசதி குறைந்த மக்களுக்கு உதவிப் பொருட்களும் வழங்கப்பட்டது
இது தவிர்த்து
கம்போங் பாரு சுங்கை பூலோ முத்து மாரியம்மன் கோவில்,
சுங்கை பூலோ மருத்துவமனை ஸ்ரீ சுப்பிரமணியர் கோவில் ,
சுங்கை பூலோ ஆர்ஆர்ஐ ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில், சுபாங் ஓம் ஸ்ரீ மதுரை வீரன் மகாகாளியம்மன் கோவில், ஷா ஆலம் கம்போங் மாசிங் தாமான் செகார் சிவசக்தி மகமாரியம்மன் கோவில், கம்போங் பாரு சுபாங் ஸ்ரீ மகா கோட்டை மதுரை வீரன் கோவில், சுபாங் ஏர்போர்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலுக்கு டத்தோ இரமணன் மானியம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

