
சித்திரை புத்தாண்டில் அனைவரது வாழ்விலும் ஏற்றம் பெற உரிய தருணம் அமைந்திருக்கிறது.
இவ்வேளையில் அனைவருக்கும் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தலைவரும் ரவாங் இந்து சங்கத்தின் தலைவருமான டத்தோ சுரேஷ் தெரிவித்தார்.
சித்திரை வெற்றிகளையே வழங்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை.
அதை உண்மையாக்கும் வகையில் நமது வாழ்வில் அமைதி, வளம், முன்னேற்றம், மனநிறைவு, வெற்றி, மகிழ்ச்சி, நல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்தையும் சித்திரைத் திருநாள் வழங்கட்டும் என்று கூறி, உலகம் முழுவதும் சித்திரைத் திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் எனது உளப்பூர்மான வாழ்த்துகள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

