இஸ்ரேல் மீது ஏவுகணைகளை பாய்ச்சி தாக்குதலை தொடங்கியது ஈரான்!

ஜெருசலேம்: ஏப்ரல் 14-
இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சிரியாவில் தங்களுடைய தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதில் என ஈரான் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, இதில் விலகியே இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்படுவதாக இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலை நோக்கி ஏராளமான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகனைகளை ஈரான் ஏவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சிரியாவின் டமாஸ்கசில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில், அங்குள்ள ஈரான் தூதரகம் கடும் சேதமடைந்தது. இரண்டு தூதரக அதிகாரிகள் உட்பட ஏழு வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஈரான் கடுங்கோபத்தில் உள்ளது என கூறப்படுகிறது.

thanks reuters

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles