மத்திய கிழக்கு மோதல்கள், மலேசியாவில் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட நிதிச் சந்தையை அரசாங்கம் அணுக்கமாகக் கண்காணிக்கிறது-பிரதமர்

கோலாலம்பூர், ஏப் 15 – மத்திய கிழக்கு நெருக்கடியின் சமீபத்திய
மேம்பாடுகளையும் அதனால் நிதிச் சந்தை உள்பட மலேசியாவுக்கு
ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அரசாங்கம் அணுக்கமாகக் கண்காணித்து
வருகிறது.

நாட்டின் நிதி மற்றும் பொருளாதார நிலையை வலுப்படுத்த அரசாங்கம்
விவேகமான முறையில் செயல்படும். இந்த நெருக்கடியினால்
மலேசியாவுக்கு ஏற்படவுள்ள பாதிப்புகளையும் அது கவனத்தில் கொள்ளும்
என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

சிரியாவின் டமாஸ்காசில் உள்ள ஈரானிய தூதரகம் மீது
இஸ்ரேல் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தமான தாக்குதலுக்குப்
பதிலடியாக ஈரான் அந்த தாக்குதலைத் தொடுத்ததாக அவர் சொன்னார்.

ஈரானிய தூதரகம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் அனைத்துலகச்
சட்டங்களை அப்பட்டமாக மீறியச் செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.

bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles