
உலு சிலாங்கூர், ஏப் 15 – கோல குபு பாரு இடைத்தேர்தலுக்கான பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரின் பெயர் வேட்புமனுத் தாக்கல் தினமான ஏப்ரல் 27 ஆம் தேதிக்குச் சில தினங்கள் முன்னதாக அறிவிக்கப்படும்.
ஜசெக சமர்ப்பித்த பெயர் பட்டியலின் அடிப்படையில் கூட்டணியின் மத்திய தலைமைத்துவம் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யும் என்று சிலாங்கூர் மாநில ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
ஏப்ரல் 27ஆம் தேதிக்கு மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம். என்று கோல குபு பாரு, அம்பாங் பெச்சாவில் நேற்று நடைபெற்ற நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
Selangor kini

