விலாயா மாநில மஇகாவின் புதிய செயலாளராக ஆர்.டி. சுந்தரம் நியமனம்!

மா. பவளச்செல்வன்

கோலாலம்பூர் , ஏப்ரல் 16-
விலாயா மாநிலத்தில் மஇகா நிர்வாகத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று
மாநில தலைவர் டத்தோ ராஜா சைமன் கூறினார்.

விலாயா மாநில மஇகா துணைத் தலைவராக பாலக்குமாரன் தொடர்கிறார்.மாநில மஇகாவின் புதிய தலைமை செயலாளராக ஆர்டி சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தித்திவங்சா தொகுதி தலைவரான அவர் இதற்கு முன் பொருளாளராக பதவி வகித்தார்.மாநிலத்தின் துணை செயலாளராக கெம்போங் தொகுதி தலைவர் கிருஷ்ணமூர்த்தி பணியை தொடர்கிறார்.

செராஸ் தொகுதி தலைவர் நலேந்திரன் மாநிலத்தின் புதிய பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.லெம்பா பந்தாய் தொகுதி துணைத் தலைவர் கணேசன் தகவல் பிரிவுக்கு பொறுப்பேற்றுள்ளார். கூட்டரசுப் பிரதேச மஇகாவில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles