
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் ஜசெக கட்சி நிபுணத்துவம் பெற்ற மலாய் வேட்பாளரை நிறுத்த வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநில பக்கத்தான் ஹராப்பான் துணை தலைவர் போர்ஹான் அமான் ஷா கூறுகையில் தமது தனிப்பட்ட இந்த கோரிக்கையை பரிசிலிக்க வேண்டும் என்றார்.
கோலகுபு பாருவில் மலாய் வாக்காளர்கள் அதிகமாக இருப்பதால் மலாய் வேட்பாளர் பொருத்தமானவர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது. பின்னர் மே 11 ஆம் தேதி வாக்களிப்பு இடம் பெறுகிறது.
இம்முறை பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பெரிக்கத்தான நேஷனல் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது என்று கூறப்படுகிறது.

