
மா. பவளச்செல்வன்
சேலம், ஏப்ரல் 16-
சேலம் மாவட்டத்தில் சங்ககிரியை அடுத்த புள்ளிபாளையம் ஸ்ரீ சண்முகா கல்வி நிறுவனங்களில் நேற்று 15.04.2024 ஆக்கம 360 ன் innohub பிரமாண்ட திறப்பு விழா நடைபெற்றது.
இதில் 14 தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக மலேசிய இந்தியர் காங்கிரஸின் தேசிய துணைத் தலைவர் மற்றும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர்
டத்தோ ஸ்ரீ டாக்டர் எம் சரவணன் மற்றும் மணக்குல விநாயகா மருத்துவக்கல்லூரியின் தலைவர்,
தட்சசீலா பல்கலைக்கழகத்தின் வேந்தர் எம் தனசேகரன் கலந்து கொண்டு ஆக்கம் 360 இன் மென்பொருள் நிறுவன அலுவலகத்தை திறந்து வைத்தனர்..
விழாவிற்கு கல்லூரி தலைவர் திரு சண்முகம் அவர்கள் தலைமை தாங்கினார் , தலைமை இயக்குனர் திரு திருமூர்த்தி ஆறுமுகம் , இணை செயலாளர் திருமதி கோகிலா அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

