சுங்கை பூலோவில் மோசமான வெள்ளம்!பாதிக்கப்பட்ட மக்களுக்குஉதவிக்கரம் நீட்டினார் டத்தோ இரமணன்

காளிதாஸ் சுப்ரமணிம்

சுங்கை பூலோ ஏப்ரல் 16-
இடி மின்னலுடன் இன்று பெய்த அடை மழையால் சுங்கை பூலோ வட்டாரத்தில் கம்போங் மிலாயூ சுபாங் மற்றும் கம்போங் குபு காஜா கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த பகுதியில் ஏறிய வெள்ளத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

எனக்கு தகவல் கிடைத்ததும் உடனடியாக வெள்ள பெரிடர் மையம், போலீல் மற்றும் எனது அதிகாரிகளுக்கு தகவல்களை தெரிவித்து களத்தில் இறங்கும்படி கேட்டுக் கொண்டேன் என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ இரமணன் தெரிவித்தார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அனைத்தும் சுங்கை பூலோ மெர்பாவ் செப்பாக் பள்ளி மண்டபத்தில் தற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து தரும்படி எனது அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன் என்று தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு கழகத்தின் துணை அமைச்சருமான டத்தோ இரமணன் தெரிவித்தார்.

டத்தோ இரமணன் உடனடியாக களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles