
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 17-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் ஜசெக வேட்பாளராக கோலகுபு பாரு கவுன்சிலர் சரிபா பக்கார் தேர்வு செய்யப்பட்டதாக என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த தொகுதியில் மலாய் வாக்காளர்கள் அதிகமாக இருப்பதால் மலாய் வேட்பாளரை களத்தில் இருக்க ஜசெக முடிவு செய்து இருப்பதாக கட்சிக்கு நெருக்கமான வட்டாரம் கொடி காட்டியுள்ளது.
நடப்பு சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹோங் காலமானதை தொடர்ந்து இப்போது கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் மற்றும் மே 11 ஆம் தேதி வாக்களிப்பு நடைபெறுகிறது.கடந்த மூன்று தவணைகளாக இந்த தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் வெற்றி பெற்று வருகிறது.
இம்முறை பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பெரிக்கத்தான நேஷனல் இடையே கடுமையான போட்டி ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
பிரி மலேசிய டூடே

