
செ.வே. முத்தமிழ் மன்னன்
ஷா ஆலம் ஏப்ரல் 18-
மலேசிய இந்து அர்ச்சகர் சங்கத்தின் சிலாங்கூர் மாநில ஆண்டுக் கூட்டத்தை புக்கிட் கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சார்பில் கவுன்சிலர் ராமு நடராஜன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
ஷா ஆலம் ஸ்ரீ மூடா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.
இந்து சமய வளர்ச்சி மற்றும் மேம்பாடுகள் தொடர்பில் மலேசிய இந்து அர்ச்சகர் சங்கத்தின் சிலாங்கூர் மாநிலத்திற்கு முழு ஆதரவை வழங்குவோம் என்று ராமு நடராஜன் தமது உரையில் தெரிவித்தார்.
மலேசிய இந்து அர்ச்சகர் சங்கத்தின் சிலாங்கூர் மாநில தலைவர் குணசேகரன் முனியாண்டி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டம் சீரும் சிறப்புடன் முடிவடைந்தது.

