வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 300 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன

நேற்று பெய்த கனமழையைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கம்போங் மேலயு, சுபாங்கில் சுமார் 300 குடும்பங்களுக்குக் கோத்தா டாமன்சாரா தொகுதியின் சமூக சேவை மையம் பல்வேறு உதவிகளை வழங்குகிறது.

நேற்றும் இன்றும் 1,000 உணவுப் பேக்கட்டுகளைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகச் சட்டமன்ற உறுப்பினர் இசுவான் காசிம் தெரிவித்தார்.

“நேற்று இரவு முதல், நாங்கள் 1,000 இரவு உணவுப் பேக்கட்டுகளை விநியோகித்தோம். இன்று மேலும் 1,000 மதிய உணவுப் பேக்கட்டுகளை நாங்கள் தயார் செய்கிறோம். ஏனெனில், சில பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளத்தால் சிக்கித் தவிக்கக்கூடும் என்று நாங்கள் கவலைப்படுகிறோம். என அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles