புந்தோங்கில் துள்சி மனோகரன், மாலிம் நாவாரில் பவானி போட்டி

பேராக் மாநிலத்தில் புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் ஜசெக சார்பில் துள்சி மனோகரன் போட்டியிடுகிறார் என்று ஜசெக தலைமை செயலாளர் அந்தோணி லோக் நேற்று அறிவித்தார்.

தெலுக் இந்தான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல வழக்கறிஞருமான மனோகரனின் புதல்வியான துள்சி மனோகரன் ஜசெகவின் அடிமட்ட உறுப்பினர் ஆவார்.

இம்முறை புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் இவரின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது.

நாட்டில் அதிகமான இந்திய வாக்காளர்களை கொண்ட தொகுதியாக புந்தோங் விளங்குகிறது.

கடந்த சில ஆண்டுகளாக புந்தோங்கில் மக்கள் சேவையாற்றி வரும் துள்சி மனோகரன் ஒரு போராளி என்பதால் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதியில் ஜசெக சார்பில் வி. பவானி போட்டியிடுகிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles