
காளிதாஸ் சுப்ரமணிம்
கோலாலம்பூர் ஏப்ரல் 20-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கெராக்கான் போட்டியிடும் என்று அதன் தேசிய தலைவர் டத்தோ டோமினிக் லாவ் இன்று அறிவித்தார்.
வரும் திங்கட்கிழமை நடக்கும் பெரிக்கத்தான் நேஷனல் சுப்ரீம் கவுன்சில் கூட்டத்தில் கெராக்கான் கட்சியின் முடிவு முறைப்படி அறிவிப்போம் என்று அவர் சொன்னார்.
கடந்தாண்டு நடைபெற்ற சிலாங்கூர் மாநில தேர்தலில் கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதியில் கெராக்கான் வேட்பாளர் ஹின்றி தியோ போட்டியிட்டு 4,119 வாக்குகள் வித்தியாசத்தில் ஜசெக வேட்பாளர் லீ கீ ஹோங் என்பவரிடம் தோல்வி கண்டார்.
இந்த தொகுதியில் தோல்வி கண்டாலும் 10,500 வாக்குகளைப் பெற்றது.
இதனிடையே பெர்சத்து கட்சி முனிரா அபு பாக்கார் என்பவரை நிறுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

