இந்திய சமுதாயம் முழுமையாக பயனடையும் வகையில் மித்ரா நிதி பயன்படுத்தப்படும்! பிரபாகரன் அறிவிப்பு

காளிதாஸ் சுப்ரமணியம்
மா. பவளச்செல்வன்

கோலகுபு பாரு ஏப்ரல் 20
இந்திய சமுதாயம் நன்மை அடையும் வகையில் 100 மில்லியன் மித்ரா நிதி முறையாக பயன்படுத்தப்படும் என்று மித்ரா தலைவர் பிரபாகரனுடன் தெரிவித்தார்.

ஏழை இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இந்த நிதி தவறாக கையாளப்படாது.

என் மீது நம்பிக்கை வைத்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மித்ரா தலைவர் பதவியை வழங்கி இருக்கிறார்.

பிரதமரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை சிறந்த முறையில் நிறைவேற்றுவேன்.

அந்த வகையில் இந்திய சமுதாயத்தின் மேம்பாடு மற்றும் நன்மைக்காக இந்த நிதி முறையாக பயன்படுத்தப்படும் என்று அவர் உத்திரவாதம் அளித்தார்.

நேற்று கோலகுபு பாரு ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய மண்டலாபிஷேக சிறப்பு பூஜையில் கலந்து கொண்டபோது பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் மித்ரா திட்டங்கள் குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles