
செ.வே. முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் ஏப்ரல் 21-
மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் ஆண்டு தேர்தலில் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த மூவர் வெற்றி பெற்றுள்ளனர்.
மூன்று உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பினாங்கு மாநில இந்தியர் கால்பந்து சங்கத்தின் தலைவர் ஸ்ரீ சங்கர் 42 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
அதேசமயம் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த ஜைலானியும் 40 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று உதவி தலைவராக தேர்வானார்.
ஏழு உச்சமன்ற உறுப்பினர்கள் பதவிக்கு 14 பேர் போட்டியிட்ட வேலையில் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த கமலேஸ்வரன் 46 வாக்குகள் பெற்று முதலிடத்தை பிடித்தார்.
பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த மூவர் இந்தத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

