
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் ஏப்ரல் 21-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது நாளை முடிவு செய்யப்படுகிறது.
நாளை திங்கட்கிழமை பெரிக்கத்தான் நேஷனல் கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படலாம் என பெரிக்கத்தான் நேஷனல் உச்சம் என்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ தக்கியூடின் ஹசான் தெரிவித்தார். நாளை 5:00 மணிக்கு தலைநகரில் நடைபெறும் இந்த கூட்டம் அனைவரின் கவனத்தை ஏற்றுள்ளது.
கோலகுபு பாருவில் பக்கத்தான் ஹராப்பானுக்கு எதிராக களம் இறங்கப்போகும் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் பெரும் ஆவலோடு உள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கோலகுபு பாருவில் கெராக்கான் சார்பில் போட்டியிட்ட தியோ கியான் ஹோங் 10,743 வாக்குகள் பெற்றார்.
ஜசெக வேட்பாளர் லீ கீ ஹோங் 14,862 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மூடா வேட்பாளர் சிவா 1,186 வாக்குகள் பிஆர்எம் வேட்பாளர் சின் பூன் லாய் 527 வாக்குகள் பெற்று தோல்வி கண்டனர்

