கோலகுபு பாரு இடைத்தேர்தலை மஇகா புறக்கணிக்கும் என்று கூறப்படும் செய்தியில் உண்மையில்லை! அன்வார்

ஷா ஆலம் ஏப்ரல் 21: ஊடக அறிக்கைகளுக்கு மாறாக, வரவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளருக்கு மஇகா உதவும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று அறிவித்தார்.

இதை மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் தம்மிடம் உறுதிப்படுத்தியதாக பிரதமரும் பக்கத்தான் ஹராப்பான் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

“எனக்கு மஇகா தலைவரிடமிருந்து அழைப்பு வந்தது. இடைத்தேர்தலில் அவர்கள் உதவுவார்கள் என்று அவர் என்னிடம் கூறினார்.அதைத்தான் விக்னேஸ்வரன் என்னிடம் கூறினார்” என்று இன்று பிகேஆரின் 25ஆவது ஆண்டு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனை உறுதிப்படுத்தினார்.

சிலாங்கூர் மாநிலத்திற்கான இடைத்தேர்தலை மஇகா புறக்கணிக்கும் என்று கூறப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என்றார்.

New straits times

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles