
செ வே.முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் ஏப்ரல் 21-
சிலாங்கூர் மாநில மைபிபிபி கட்சியின் இடைக்கால தலைவராக டாக்டர் சுரேந்திரன் இன்று நியமனம் செய்யப்பட்டார்.
தன்னலம் கருதாமல் மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றி வரும் டாக்டர் சுரேந்திரன் உலுலங்காட் மைபிபிபி தொகுதி தலைவனாகவும் இருக்கிறார்.
இன்று நடைபெற்ற மைபிபிபி கட்சியின் உச்சமன்ற கூட்டத்தில் சிலாங்கூர் மாநில மைபிபிபி இடைக்கால தலைவராக டாக்டர் சுரேந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.
என் மீது நம்பிக்கை வைத்து சிலாங்கூர் மாநில மைபிபிபி இடைக்கால தலைவராக நியமனம் செய்த மைபிபிபி தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா மற்றும் தேசிய உதவித் தலைவர் டத்தோ மோகன் கந்தசாமி உட்பட உச்சமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்த வேலையில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.

