
ஷா ஆலம், ஏப் 22- ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகளுக்கிடையிலான உறவு மிகவும் வலுவாக உள்ளது. அதில் விரிசல் ஏற்படுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக கூறினார்.
அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களும் புரிந்துணர்வை வளர்ப்பதில் சிக்கலை எதிர்கொள்ளவில்லை. ஆயினும், தலைமைத்துவத்தின் குரலைப் பிரதிநிதிக்காத சில வெளி பிரச்சனைகள் உள்ளன என்று கெஅடிலான் கட்சியின் தலைவருமான அவர் தெரிவித்தார்.
அமைச்சரவையில் நாங்கள் அந்த பிரச்சனையை (புரிந்துணர்வு) எதிர்கொள்ளவில்லை. ஆனால் வெளியே, தலைமையின் குரலை பிரதிபலிக்காத குரல்கள் உள்ளன. அமைச்சரவைக்கு வெளியே சில விஷயங்கள் பகிரங்கப் படுத்தப்படுவதை நான் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
Bernama

