
கோலாலம்பூர் ஏப்ரல் 21-
கோலாகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் பெயரை வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தெரிவித்தார்.
வேட்பாளர் யார் என்பதை நாளை பெரிக்கத்தான் நேஷனல் சுப்ரீம் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்வோம்.
வேட்பாளர் பட்டியலில் பலரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதில் யார் வேட்பாளர் என்பதை நாளை முடிவு செய்து விடுவோம் என்று அவர் சொன்னார்.
ஆஸ்ட்ரோ நியூஸ்

