
செ.வே. முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் ஏப்ரல் 22-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ள வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க செல்ல வேண்டும் என்று மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா கேட்டுக் கொண்டார்.
தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயக உரிமை. அதை நிலை நாட்டுவது வாக்காளர்களின் கடமை.
வாக்களிக்கச் செல்ல வேண்டாம் என்று சிலர் டிக் டாக்கில் பேசிக் கொண்டிருப்பார்கள்.
அதையெல்லாம் பொறுப்பெடுத்தாமல் வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்கும் கடமையை நிறைவேற்ற வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
மைபிபிபி கட்சியின் உச்சமன்ற கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

