தமிழ் அறவாரியத்தின் முதல் மின்னியல் யுகத்தில் தமிழ்க்கல்வி கலந்துரையாடல் !

கோலாலம்பூர், ஏப்ரல் 21–
மலேசிய தமிழ் அறவாரியம், மலேசிய தமிழாசிரியர் சங்கம், தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம், மலேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் சங்கத்தின் இணை ஏற்பாட்டில் நேற்று மின்னியல் யுகத்தில் தமிழ்க்கல்வி என்ற கலந்துரையாடல் பெட்டாலிங் ஜெயா, விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் விமரிசையாக நடந்தேறியது.

இந்த கலந்துரையாடலில் பெற்றோர்கள், தலைமையாசிரியர்கள், அரசு சாரா இயங்கங்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பெற்றோர்களுக்கு 21ஆம் நூற்றாண்டு தமிழ்க்கல்வியின் வளர்ச்சிக்கு இலக்கவியல் திறனின் (Digital) பங்கினை உணர்த்தவும், பெற்றோரிடையே புதிய கலைத்திட்டம் மற்றும் வகுப்புசார் மதிப்பீட்டைப் பற்றி கலந்தாசிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இக்கலந்துரையாடலில் பெற்றோர்கள் மின்னியல் யுகத்தில் தமிழ்க்கல்வி சார்ந்த பல கேள்விகளையும் கருத்துகளையும் பகிர்ந்தனர்.

இந்த கேள்விகளுக்குத் துறைசார் வல்லுனர்களான முனைவர் டாக்டர் குமாரவேலு, முனைவர் முத்தரசன், திரு. அனந்தன் ஆகியோர் சிறப்பான விளக்கங்களை அளித்தனர்.

இப்பயன்மிக்க கருத்தரங்கம் அடுத்த மாதம் கெடா, ஜோகூர் மாநிலங்களிலும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

பிள்ளைகளின் எதிர்கால கல்வித்திட்டத்தை வடிவமைப்பதில் பெற்றோரின் பங்கும் அவசியமாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles