
கோலாலம்பூர், ஏப் 22- கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மாட்சிமை தங்கிய பேரரசருக்கு எதிராக தனது தனது முகநூல் பக்கத்தில் மிரட்டல் விடுத்த செம்பனைத் தோட்டத் தொழிலாளி ஒருவருக்கு இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் 12,000 வெள்ளி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
தனக்கு எதிரான குற்றச்சாட்டை சம்சூரி ரம்லி (வயது 45) ஒப்புக்கொண்டதையடுத்து நீதிபதி சித்தி அமினா கசாலி அவருக்கு இத்தண்டனையை விதித்தார்.
மேலும், அபராதத்தை செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், அந்த நபர் அபராதத் தொகையைச் செலுத்தினார்.
bernama

