
காளிதாஸ் சுப்ரமணியம்
புத்ரா ஜெயா ஏப்ரல் 22-
மலேசிய கூட்டுறவு ஆணையத்தின் (எஸ்.கே.எம்) இயக்குநராக பினாங்கு மாநில பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் இன்று நியமனம் செய்யப்பட்டார்.
தொழில் முனைவோர் கூட்டுறவு மேம்பட்டு துறை அமைச்சர் டத்தோ எவோன் பெனடிக் சார்பில் அதன் துணை அமைச்சர் டத்தோ இரமணன் நியமனக் கடிதத்தை குமரேசனிடம் வழங்கினார்.

சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் அவர்களுக்குப் பாராட்டுக்கள். அவர் தனது கடமைகளையும் பணிகளையும் சிறப்பாகச் செய்து மலேசியக் கூட்டுறவுச் சங்கங்களின் வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டும் என்று டத்தோ இரமணன் கேட்டுக் கொண்டார்.
தம் மீது நம்பிக்கை வைத்து இந்த இயக்குனர் பதவியை வழங்கிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமைச்சர் டத்தோ எவோன் பெனடிக் மற்றும் துணை அமைச்சர் டத்தோ இரமணன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குமரேசன் தெரிவித்தார்.

