
செ.வே.முத்தமிழ்மன்னன்
பிறை, ஏப்ரல் 22-
பசுமைத் தன்மை மகிழ்ச்சியைத் தருகிறது” என்ற கருப்பொருளுடன் பினாங்கு மாநிலத்தில் பத்து லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை பினாங்கு மாநில முதல்வர் சாவ் கூன் கோன் இன்று அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
பினாங்கு மாநிலத் தலைவரின் தொண்டு அறக்கட்டளை, வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக் குழு அலுவலகத்துடன் இணைந்து இந்த மரக்கன்றுகள் நடும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை ஈடுகட்டவும், சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவும் பினாங்கு மாநில அரசின் முயற்சிகளில் இந்தத் திட்டம் ஒன்றாகும் என்று பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ தெரிவித்தார்.
இத்திட்டம் நமது மாநிலத்தின் விலைமதிப்பற்ற பொக்கிஷமான உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்கும். அக்கறையுள்ள சமூகத்தின் கண்களைத் திறக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதலாக, ஒரு மில்லியன் மரங்களை நடுவது இயற்கை சூழலின் தரத்தை மேம்படுத்துகிறது.
அந்த வகையில் பிறை சட்டமன்ற தொகுதியில் குறைந்தது ஒன்றரை லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டமும் இதில் அடங்கும் என்று அவர் சொன்னார்.பத்து காவான் நாடாளுமன்ற தொகுதியில் ஒன்றரை லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டமும் இதில் அடங்கும் என்றார் அவர்.
இதனிடையே பத்து காவான் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ சங்கர் கூறுகையில் எங்களுடன் இணைந்து ஜாலான் பாரு முனீஸ்வரர் ஆலய நிர்வாகம் மரக்கன்றுகளை நடுவதில் இணைந்துள்ளன என்றார் அவர்.
பிறை சட்டமன்ற தொகுதியில் மட்டும் 20,000 மரக்கன்றுகள் நடப்படும் என அவர் சொன்னார்.

