ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளரை அம்னோ ஆதரிக்கும்! துணை பிரதமர் அறிவிப்பு

உலு சிலாங்கூர், ஏப்ரல் 22-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளருக்கு அம்னோ முழு ஆதரவு வழங்கும் என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் யார் போட்டியிட்டாலும் நாங்கள் முழு ஆதரவை வழங்குவோம்.

நமது கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற நாங்கள் கடுமையாக உழைப்போம். இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பார் என்று அவர் சொன்னார்.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles